• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தனியார் கம்பெனி மீது ஆட்சியரிடம் புகார்

Byமுகமதி

Feb 18, 2026

புதுக்கோட்டை அருகே ஆதிதிராவிடர் நலத்துறைக்குச் சொந்தமான இடத்தை தனியார் கம்பெனி ஆக்கிரமித்து விட்டதாக ஆட்சியரிடம் புகார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பூபதி கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார்.

அதில் அவர் கறம்பக்குடி அருகே உள்ள முள்ளம் குறிச்சி மறவன் பட்டி கருப்பக்கோன்தெரு ஆதிதிராவிட மக்கள் பயன்பெறும் வகையில் முள்ளம் குறிச்சியில் கடந்த 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசாங்கம் 15 ஹெச்பி திறன் கொண்ட ஆழ்குழாய் கிணறு அமைத்து அப்பகுதியில் உள்ள பட்டியலின மக்கள் விவசாயம் செய்து பயன்பெறும் வகையில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

அதை அந்த மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் நாளடைவில் அந்த ஆழ்குழாய்க் கிணற்றில் தண்ணீர் இல்லாததால் அப்பொழுது மக்கள் விவசாயம் செய்யாமல் தரிசாக போட்டு வைத்திருந்தார்கள். இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி காட்டம்பட்டி புதூர் என்ற பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று அப்பகுதியில் உள்ள நிலங்களை விலைக்கு வாங்கி இருப்பதோடு ஆழ்குழாய் கிணறு இருந்த இடத்தையும் ஆக்கிரமித்து விட்டது. இதனை கண்டு கொள்ள வேண்டிய ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. மேலும் ஆழ்குழாய் கிணற்றுடன் இருந்த கட்டடம் உட்பட 50 லட்சம் ரூபாய் மதிப்புக்கு மேல் உள்ள சொத்தை அந்த நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் அதை உடனடியாக தடுத்து நிறுத்தி அவர்களிடமிருந்து அரசு மீட்க வேண்டும் என்பதோடு அந்த கம்பெனியின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்திருக்கிறார்.

இது பேட்டியும் அளித்திருக்கிறார்.