• Mon. Jan 20th, 2025

வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது

ByA.Tamilselvan

Nov 21, 2022

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான மறைந்த வாஜ்பாயின் வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
தேசிய விருது பெற்ற இயக்குனர் ரவி ஜாதவ் இயக்க, உத்கர்ஷ் நைதானி கதை எழுதுகிறார். இப்படத்தில் பிரபல இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி வாஜ்பாய் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பானுஷாலி ஸ்டுடியோஸ் மற்றும் லெஜண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. பங்கஜ் திரிபாதி இந்தப் படம் குறித்து நடிகர் பங்கஜ் திரிபாதி கூறியதாவது, “இப்படிப்பட்ட மனிதாபிமான அரசியல்வாதியை திரையில் காட்டவுள்ளது எனக்கு பெருமை. அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் புகழ்பெற்ற கவிஞர். அவருடைய கதாபாத்திரத்தில் நடிப்பது என்னைப் போன்ற ஒரு நடிகருக்குக் கிடைத்த பாக்கியம்” என்று கூறியுள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.