

இந்தியாவின் பன்முகத்தன்னை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தனியார் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பம் கூறியுள்ளதாவது: கடந்த சில ஆண்டுகளாக பன்முகத்தன்மை கொண்ட இந்தியா என்ற எண்ணம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை என்ற எண்ணம் சிதைக்கப்பட்டு, ஒரு மதத்தைத் தழுவுவது என்று சுருக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் உட்பட சமூகத்தின் அனைத்துத் தூண்களும் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளன. இந்தியாவுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மக்கள் கவலைப்படுகிறார்கள். பலர் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறுகிறார்கள், மாறவில்லை என்றால் குடும்பத்தினர் துன்புறுத்தப்படுவார்கள் என்ற பயத்தில் அவர்கள் உள்ளனர்.இந்த நாட்டில் அனைத்து உரிமைகளையும் அனுபவிக்க விரும்பினால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை தழுவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

