கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனத்தில் 3 இளைஞர்கள் பேருந்தில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த அரசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்து .
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தை சேர்ந்த 25 வயதான காமிக்ஸ் பாண்டியராஜன் அதே பகுதியை சேர்ந்த 24 வயதான தமிழ்ச்செல்வன் இவர்களின் நண்பர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதான லிஜோமோல் ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வடசேரி பேருந்து நிலையத்துக்குள் நுழைந்தனர். எதிர்பாராதவிதமாக பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த மார்த்தாண்டம் செல்லுகின்ற அரசு பேருந்தில் இவர்களின் பைக் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே காமிக்ஸ் பாண்டியராஜன் தமிழ்ச்செல்வன் ஆகிய இரு இளைஞர்களும் பலியானார்கள்.
லிஜோமோல் என்ற இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் அரசு பேருந்த மீதி மோட்டார் சைக்கிளில் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து வடசேரி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.