தென்காசி மாவட்டம், புளியங்குடியில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக, ஆணையாளர் சிங்க அதிரடியான அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.
அந்தவகையில், சென்ற வாரம் கொரோனா தடுப்பூசி போடாத வியாபார தலங்கள், கோவில் சினிமா தியேட்டர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் காய்கறி மார்க்கெட்டில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தடுப்பூசி மற்றும் முகம் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் மற்றும் வழக்கு பதிவு என அதிரடியாக உத்தரவிட்டார்.
தற்போது பொது இடங்கள் மற்றும் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை எச்சரித்து அறிவுரை கூறியதுடன், அனைவருக்கும் சுமார் 2000 முக கவசங்களை இலவசமாக வழங்கினார். இந்த நிகழ்வில் ராயல் கார்த்திகேயன் மற்றும் மகேஷ் நகராட்சி பாஸ்கர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.