கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வெள்ளைமடம் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது,இங்கு உள்ள ஏடிஎம் மிஷின் உடைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு அப்பகுதியினர் தகவல் தெரிந்ததை தொடர்ந்து அதிகாரிகள் போலீசாரை அழைத்து வந்து பார்த்ததனர்.
அங்கு வங்கியின் வெளியே இருந்த ஏடிஎம் மிஷின் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்த நிலையில் உடனே வங்கி அதிகாரிகள் பணத்தை சரிபார்த்த போது பணம் திருட்டு போகவில்லை வாரக் கடைசி விடுமுறை நாள் என்பதால் வாடிக்கையாளர்கள் அதிகளவில் பணம் எடுத்து உள்ளதால் ஏடிஎம் எந்திரத்தில் பணம் காலியாகி உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் கொள்ளையன் மெஷினை உடைத்து பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர். மேலும் ,போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில் வடநாட்டு இளைஞர் செயல்பட்டு இருப்பதாக போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.