சுருக்குமடி வலை விவகாரம் தொடர்பாக தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மீனவர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது.
புதுச்சேரியில் மொத்தமுள்ள 18 மீனவ கிராமங்கலில் நல்லவாடு மீனவ கிராமத்தினர் மட்டும் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு மற்ற மீனவர் கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் சுருக்குமடி வலை பயன்படுத்துவது தொடர்பாக சின்ன வீராம்பட்டினம் அருகே நடுக்கடலில் நல்லவாடு மற்றும் அரியாங்குப்பம் மீனவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனையறித்த மீனவர்கள் கரையில் கையில் பயங்கர ஆயுதங்களுடன் குவிய ஆரம்பித்தனர். இதனைக் கேள்விப்பட்டு ஏராளமான காவல்துறையினர் அங்கு குவிந்தனர். போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி இரண்டு கிராம மீனவர்களும் ஒருவரை, ஒருவர் தாக்கிக்கொண்டு கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் போலீசார் நேற்று மாலை வானத்தை நோக்கி துப்பாக்கியால சுட்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல வைத்தனர். அதே நேரம் நடுக்கடலில் மீனவர்கள் தொடர்ந்து படகுகள் மூலம் தாக்குதலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.