தஞ்சாவூர், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே என்.எஸ்.பி., லாட்ஜ் உள்ளது. இங்கு கடந்த 22ம் தேதி முதல் கோயம்புத்துார் மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த லெனட்பிராங்கிலின் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில் லெனட்பிராங்கிலின் அறையில் மர்மமான முறையில், மூக்கிலும் வாயிலும் ரத்தம் கொட்டிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து லாட்ஜில் பணியாற்றும் ஊழியர்கள் பார்த்து விட்டு, மருத்துவகல்லுாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுனர்கள் தடயங்களை சேகரித்த போது, லெனட்பிராங்கிலின் தலையில் இரும்பு கம்பியால், அடித்தில் பலத்த காயம் ஏற்பட்டதற்கான தடயம் இருந்துள்ளது. மேலும், அவரது உடலை மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக துாக்கி சென்ற போது, அவருடைய கண், காது, மூக்கு, வாயிலிருந்து ரத்தம் கொட்டியுதாக தெரிவித்தனர் .
இதையடுத்து போலீசார் அறையில் நடத்திய சோதனையில், அவரது டைரி ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில் பல்வேறு பெண்களின் விபரங்கள், அவர்களுக்கான தொகை, எப்போது ஊருக்கு அனுப்ப வேண்டும் போன்ற அனைத்து தகவல்களும், அவரிடம், தஞ்சாவூரில் பாலியல் தொழில் நடத்தி போலீசில் சிக்கிய கும்பலை சேர்ந்த ஒருவரின் டூ விலர் இருந்தது. இதை போலீசார் கைப்பற்றி பாலியல் தொழில் கும்பலுக்கும், லெனட்பிரங்கிலினுக்கும் தகராறு ஏற்பட்டதால் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா என விசாரித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.