திருவில்லிபுத்தூரில் இயங்கிவரும் “தமிழ் இலக்கியப் பெருமன்றத்தின் முப்பெரும் விழா” வி.பி.எம்.எம். கல்லூரியில் மன்றத்தின் தலைவர் கோதையூர் மணியன் தலைமையில் நடைபெற்றது. 250 ஆம் எழுத்தாளர் சந்திப்பு மலரினை கல்லூரியின் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர் வெளியிட முதல் பிரதியினை கவிஞர் சுரா பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதியினை எழுத்தாளர் சரஸ்வதி உமேஷ் பெற்றுக் கொண்டார். இரண்டாம் அமர்வில் புதுச்சேரி தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியை முனைவர் ஆ.விஜயராணி நூல்கள் விமர்சனம் நடைபெற்றது. நூல்களை பேராசிரியர் முனைவர் க.சிவனேசன், புலவர் க.சிவனணைந்த பெருமாள் விமர்சனம் செய்தனர். எழுத்தாளர் ஆ.விஜயராணி அவர்களுக்கு மன்றத்தின் சார்பில் கபிலர் விருது வழங்கப்பட்டது. பின்னர் எழுத்தாளர் ஆ.விஜயராணி ஏற்புரை வழங்கினார். புலவர் கா.காளியப்பன் சிறப்புரை ஆற்றினார். பின்னர் மூன்றாம் அமர்வில் வி.பி.எம்.எம்.கல்லூரி மாணவிகள் இருபதுபேர் கவிஞர் சுரா தலைமையில் பல்வேறு தலைப்புகளில் கவிதை பாடினர். அனைவருக்கும் மன்றத்தின் சார்பில் இளைய பாரதி என்ற விருதினையும் பரிசினையும் கவிஞர் சுரா வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சமீம் ராணி தமிழ்த்துறைத் தலைவர் கோ.சங்கரம்மாள் ஆசிரியர்கள் இணைந்து செய்தனர். விழாவில் கல்லூரி மாணவ மாணவிகள் இலக்கியவாதிகள் இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பத்மா ஆசிரியை வரவேற்புரை வழங்கினார். சங்கீத வித்வான் மோகன் இசைப்பாடல் பாடினார். பா.கணேசன் பின்னணி இசையமைத்தார். முதுகலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவி செல்வி ஆ.முத்தரசி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இலக்கியப் பெருமன்றத்தின் செயலாளர் கோ.எத்திராஜ் நன்றியுரை கூறினார்.