• Thu. Nov 5th, 2026

வழிப்பறி செய்த மூன்று பேர் கைது..,

ByK Kaliraj

Nov 5, 2026

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த முத்துக்குமார் வியாபாரி சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் பகுதியில் வியாபாரம் செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ராஜபாளையத்துக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது ‌ சங்கரமூர்த்தி பட்டி என அருகே மூன்று பேர் வழிமறித்து அவரிடம் இருந்த ரூபாய் 40 ஆயிரம் ரொக்க பணத்தை பறித்து விட்டு சென்று விட்டனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசில் புகார் செய்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிய நிலையில்,

அப்பகுதியில் தலைமறைவாக இருந்த ஏழாயிரம் பண்ணை தேவர் நகரை சேர்ந்த ஆதிகேசவன் (வயது 18), சித்திரைச் செல்வன் (வயது 18), ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள ரெட்டியபட்டியை சேர்ந்த பரமேஸ்வரன் (வயது 24) மூன்று பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து தொடர்ந்து நகை திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.