விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பழைய ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் முனீஸ்வரன் இவருக்கு சொந்தமான காரில் கோவில்பட்டிக்கு ஏழாயிரம் பண்ணை பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் புகை கிளம்பியதால் உடனடியாக காரில் இருந்து இறங்கியதும் கார் தீ பற்றி எரிந்தது.

தொடர்ந்து ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு சிறப்பு அலுவலர் (போக்குவரத்து) மோகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்தில் கார் சேதம் அடைந்தது.
