விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம் பண்ணை, வெம்பக்கோட்டை, துலுக்கன்குறிச்சி, தாயில்பட்டி, பனையடிப்பட்டி, பேர்நாயக்கன்பட்டி, வெற்றிலை யூரணி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் இயங்கி வருகின்றன.

கடந்த வாரம் மாதக் கடைசி என்பதால் பட்டாசு விற்பனை எதிர்பார்த்த விற்பனையாகாமல் மந்தமாக இருந்தது . தற்போது மாதத்தின் முதல் வாரம் என்பதால் சம்பளம் வாங்கியவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தீபாவளி போனஸ் கிடைத்ததால் அதனை கொண்டு ஏராளமானோர் பட்டாசு கடைகளுக்கு தங்களுக்கு விரும்பிய பட்டாசுகளை வாங்க விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் திருநெல்வேலி, தூத்துக்குடி, உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் கார்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் நேரில் வந்து பட்டாசுகளை வாங்க குவிந்ததால் இப்பகுதியில் பட்டாசு விற்பனை களை கட்டியுள்ளது.
இது குறித்து பட்டாசு கடை உரிமையாளர்கள் தெரிவித்தது
தற்போது மாத சம்பளம் மற்றும் தீபாவளி போனஸ் வாங்கியவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து நேரில் வருகை தந்து விரும்பிய பட்டாசுகளை பார்த்து தேர்வு செய்து அவர்களுக்கு தேவையான விலையில் தள்ளுபடி வழங்கிய பட்டாசு விற்பனை செய்துள்ளோம் கடந்த இரண்டு தினங்களாக ஆன்லைன் பட்டாசு விற்பனை விட நேரில் அதிகமானோர் வருகை தந்ததால் விற்பனை களைகட்டி உள்ளது. இந்த ஆண்டு பட்டாசு கடைகளில் பட்டாசுகள் முழுமையாக இருக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.