• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

அம்பேத்கர் 66 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக டாக்டர் அம்பேத்கர் திருவருட்சிலைக்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பெ.ச. சிறுத்தை வள்ளுவன் தலைமை தாங்கினார். ஈரோடு கிழக்கு மாவட்ட மாநில நிர்வாகி எஸ்.எம்.சாதிக் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கோவை மேற்கு மண்டல செயலாளர் சுசி கலையரசன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் அக்பரலி, கொடுமுடி பழனிச்சாமி. மற்றும் ஈரோடு மாநகரச் செயலாளர் மு.அம்ஜத் கான் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் ஜாபர் அலி, பால்ராஜ் (எ) நக்கீரன், ஆனந்தன், கதிரவன், சிவகிரி திருநாவுக்கரசு, தென்னரசு, சக்தி வளவன், சரவணன், டாஸ்மாக் மண்டலச் செயலாளர் எலைட் குப்புசாமி, மாரிமுத்து, மகளிர் விடுதலை இயக்க தோழர்கள் சீதா கௌரி, சுப்புலட்சுமி, ஸ்டெல்லா மற்றும் ஈரோடு மேற்கு மாவட்ட பொருளாளர் விஜயபாலன் அவர்கள் மற்றும் தொகுதி செயலாளர்கள் சண்முகம், மதிவாணன், கே.கே.மூர்த்தி, சூலை கென்னடி, சரண், செந்தமிழ் வளவன், பார்த்திபன்,அப்சர்,ஹரிகலந்து கொண்டனர். தலைவர் தொல்.திருமாவளவன் ஆணைப்படி சமூக நல்லிணக்க உறுதிமொழியை விடுதலைச் சிறுத்தைகள் அனைவரும் சமூக ஒற்றுமைக்காகவும், சமத்துவத்துக்காகவும், ஜனநாயகத்தை பேணி காக்கவும் உறுதிமொழி ஏற்றனர்.