• Thu. Mar 28th, 2024

கோசாலையை மூடக்கோரி தமிழ்ப் புலிகள் கட்சி கோரிக்கை

சட்டவிரோதமாகவும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி வரும் தனியார் கபிலை நந்தி கோசாலையை மூடக்கோரி 20க்கும் மேற்பட்ட தமிழ்ப்புலிகள் கட்சிகளை சார்ந்தவர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது.தற்பொழுது கேரளாவுக்கு மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீதும் வாகன ஓட்டுனர்கள் மீதும் இந்து அமைப்புகளை சார்ந்த ஒரு சில இயக்கங்கள் குறிப்பாக ஹிந்து மக்கள் முன்னணி என்ற அமைப்பை நடத்தி வரும் தமிழ்ச்செல்வன் என்பவர் பெருந்துறை நெடுஞ்சாலைகளில் சட்டவிரோதமாக மாடுகளை கடத்தப்படுவதாக சொல்லி வாகனங்களை வழி மறிப்பது தொடர் அவதியாக இருக்கிறது. இது தொடர்பாக மாட்டின் உரிமையாளர்கள் நீதிமன்ற மூலம் வழக்கு நடத்தி நீதி ஆணையை பெற்றாலும் உரியவர்களிடம் மாடுகளை ஒப்படைக்க மறுத்து அவர்களிடம் அதிக தொகை கேட்பது, காவல்துறை அதிகாரிகள் வந்தாலும் அவர்களை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதுடன், மீண்டும் மீண்டும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக இவர் இஸ்லாமியர்கள், தலித்கள் மீதான பிரச்சனையாகவே மடைமாற்றி விடுவதுடன் இஸ்லாமியர்கள், தலித் சமூக நல்லிணக்கத்தை சீர்குழையும் வகையில் செய்யப்பட்டு வருகிறார். இவரால் அதிகமான தலித் மாட்டு வியாபாரிகளும், இஸ்லாமிய மாட்டு வியாபாரிகளும் கடுமையாக பாதித்துள்ளனர். நேர்மையான முறையில் சேவை மனப்பான்மையோடு இயங்க வேண்டிய கபிலை நந்தி கோ சாலை முழுக்க முழுக்க சட்டம், ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் கோசாலை மீது நடவடிக்கை எடுத்தும் இஸ்லாமியர், தலித் வியாபாரிகளின் மாடுகளை விடுவித்து அங்குள்ள மாடுகளை மற்ற கோசாலையில் ஒப்படைக்க வேண்டும். மேலும் கபிலை நந்தி கோசாலையே மூட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *