ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா, புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவருடைய மனைவி கலாமணி 20 வயது நிறைமாத கர்ப்பிணியான அவர், நேற்று மாலை 7 மணியளவில் பிரசவ வலியால் துடித்தார். அதை அறிந்த அவரது உறவினர் உடனடியாக புளியம்பட்டி துணை சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

108 ஆம்புலன்ஸ் சத்தியமங்கலம் பஸ் டிப்போ அருகே வந்தபோது கலாமணிக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையை புரிந்துகொண்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தயாநிதி வாகனத்தை ஓரமாக நிறுத்தி மருத்துவ நுட்புநர் அஜித்குமார் உதவியுடன் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது கலாமணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் பத்திரமாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் வெ.அஜித்குமார் மற்றும் வாகன ஓட்டுனர் அ.தயாநிதி ஆகியோரின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர்.
- மதுரை அரசரடி நீர்தேக்கத்தொட்டி முறையற்ற வகையில் பராமரிப்பு- பொதுமக்கள் அதிருப்திகுடிநீர் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் நீர் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதை சரியாக பாராமரிக்க வேண்டும் மதுரை அரசரடி […]
- மஞ்சூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகம் மஞ்சூர் […]
- சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைதிருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமணியசுவாமிகோயிலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மதுரை […]
- தொழிற்சாலை ஊழியர்களை மிரட்டும் வன விலங்குகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தேயிலை […]
- ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அவதூறாக பேசிய திமுகவின் ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை […]
- முதுமலை பகுதியில் புதிய பாலம் கட்டும் பணியினை உடனே துவங்க கோரிக்கைமுதுமலை புலிகள் காப்பகம் அருகே பழங்குடியினர் மற்றும் வளர்ப்பு யானைகள் நடக்க உதவும் வகையில் புதிய […]
- வாடிப்பட்டியில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் […]
- வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம்வாடிப்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம் நடைபெற்றதுமதுரை வாடிப்பட்டி […]
- ராமேஷ்வரம் கடலில் வீசப்பட்ட தங்ககட்டிகளை தேடும் நீர்மூழ்கி வீரர்கள்இலங்கையிலிருந்து- ராமேஷ்வரம் வழியாக தங்ககட்டிகள் கடத்தி வந்து போலீசார் சுற்றி வளைத்ததால் கடலில் வீசியதாகவும் அதனை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 111: அத்த இருப்பைப் பூவின் அன்னதுய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்வரி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்நம்மிடம் 1 ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை, கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு […]
- ஜஸ்டின் பேத்தி நாயகியாக அறிமுகமாகும் அஞ்சி நடுங்கிடஃபிளை டார்ட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) நிறுவனம் தயாரிக்கும் ‘அஞ்சி நடுங்கிட’ எனும் புதிய […]
- ஆயிரம் ஆண்டு பழைமையான தட்சிணாமூர்த்தி சிலை கண்டுபிடிப்பு..!விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கிராமமாகக் கருதப்படும் எண்ணாயிரம் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 376பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம. பொருள் (மு.வ): ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் […]