• Fri. Jun 12th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

பள்ளி வாகனங்களை ஆட்சியர் தலைமையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு..,

ByM.I.MOHAMMED FAROOK

May 29, 2026

காரைக்கால் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு தற்போது நடைபெற்று வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி வாகனங்கள் இயங்கி வருகின்றன.

இதனிடையே பள்ளி வாகனங்களை போக்குவரத்து அலுவலகத்தில் வைத்து ஆய்வு மேற்கொண்டனர் இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி மற்றும் ஆர்டிஓ தட்சிணாமூர்த்தி ஆகியோர் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பள்ளி வாகனங்களில் முதல் உதவி பெட்டி தீயணைப்பு கருவிகள் இருக்கிறதா என்றும் சோதனை செய்யப்பட்டது. மற்றும் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் தானியங்கி வாட்டர் ஸ்ப்ரே பைப்புகள் பொருத்தப்பட்டுள்ளது.

பள்ளி வாகனங்களுக்கு உரிமம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு ஓட்டுனர்கள் பள்ளி வாகனங்களை எவ்வாறு இயக்க வேண்டும் எனவும் அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களை கொண்டு பள்ளி வாகனங்களை இயக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது. அப்போது வாகனங்களில் ஏறி ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியரை பள்ளி வாகனத்தில் அமர வைத்து போக்குவரத்து துறை மோட்டார் வாகன ஆய்வாளர் நவீத் இயக்கி சோதனை மேற்கொண்டார்.