வேலூர் அருகே மின்கம்பம் அறுந்து விழுந்ததால் ரயில்கள் பாதிவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகள் கடும் அவதி ப்படுகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் மின்கம்பம் அறுந்து விழுந்ததால் சென்னையில் இருந்து கோவை.பெங்களூர் செல்லும் ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.ரயில்கள் இயக்குவதற்காக வைக்கப்பட்டிருந்த உயர் மின் அழுத்த கம்பி திடீரென்று அந்தவழியே வந்த சென்னை -கோவை இண்டர்சிட்டி ரயில் மீது விழுந்ததால் ரயில் ஓட்டுனர் உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார். தற்போது அதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.