கல்லூரி மாணவிகளுக்கு முதல்கட்டமாக 2.5 லட்சம் மாணவிகளுக்கு ரூ1000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக தகவல்.
அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. உயர்கல்வியில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி மாணவிகள் தங்களுடைய விவரங்களை பதிவு செய்தனர். சமீபத்தில் இதற்கான நிதியையும் ஒதுக்கி தமிழக அரசு, அரசாணையாக வெளியிட்டது. இந்தநிலையில் முதல்கட்டமாக 2.5லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.