

வாகன விபத்தில் சிக்கிய நபரை மீட்டு தக்க நேரத்தில் உயர் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார் கே.டி.ராஜேந்திரபாலாஜி.

சிவகாசி – ஸ்ரீவில்லிபுத்தூர் சாலை, கார்த்திகைபட்டி விலக்கு அருகிலுள்ள யாகாஷ் மெட்ரிக் பள்ளி அருகே வாகன விபத்தில் சிக்கிய நபரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் உயர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் கழக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி.
