


திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை அரசு மருத்துவமனை அருகில் திருச்சி சாலையில் இருந்து கோவை நோக்கி காத்தாடி இறக்கைகளை எடுத்துக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது மறைவான பகுதியில் லாரியை திருப்பம் என்ற போது எதிர்பாராதவிதமாக லாரி திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டது.

இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் போக்குவரத்து போலீசார் உடனடியாக விரைந்து சென்று ஜேசிபி வாகனத்தின் உதவியுடன் சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியன் கற்களை அகற்றி லாரியை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அரை மணி நேர போராட்டத்திற்கு பின் லாரியானது அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.


