



திருப்பூர் அருகே நாச்சிபாளையம் பகுதியில் அரிய வகை ஆந்தை ஒன்று பறக்க முடியாமல் கீழே விழுந்துள்ளது.

அதனை மீட்ட அப்பகுதி கிராமமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் கிடைத்து அங்கு வந்த வனத்துறையினர் ஆந்தையை பத்திரமாக மீட்டனர். பறக்க முடியாமல் தடுமாறி இருந்த அந்த அரிய வகை ஆந்தையை முதல் உதவி சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

இந்த அரியவகை பறவை தொடர்பாக வனத்துறையினர் கூறுகையில் வெண்கூகை எனப்படும் வகையை சேர்ந்த ஆந்தையாகும்.இது ஆஸ்திரேலியாவில் பரவலாக பொதுவாக காணப்படும் பறவை. சிறிய பூச்சிகள் சிறிய இழைகள் மற்றும் சிறு ஊர்வன ஆகியவற்றை இரையாக உண்டு வாழக்கூடியது என தெரிவித்தனர்.இந்த அரிய வகை வெளிநாட்டு பறவையான ஆந்தையை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

