• Thu. Apr 25th, 2024

சிவகங்கை கழுங்குப்பட்டி ஏரிக்கண்மாயில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி..! ஆனந்தக் குளியலில் சுற்றுலா பயணிகள்..!

சிவகங்கை அருகே தொடர் மழையால் கழுங்கில், அருவி போல் ஆர்பரித்து கொட்டும் தண்ணீர். உற்சாக குளியலிடும் சுற்றுலா பயணிகள்

     சிவகங்கை மாவட்டம் ஏரியூர் அருகே கழுங்குப்பட்டியில் உள்ள ஏரிக்கண்மாய்  சுமார் 227 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப் பெரிய கண்மாய் ஆகும். இக்கண்மாயில் 3 டிஎம்சி தண்ணீரை தேக்கிவைக்க முடியும்.  மழைகாலங்களில்  மதுரை மாவட்டத்தில் உள்ள கரந்தமலை, எறக்காழ மலை, அழகர்கோவில்மலை, பூதகுடிமலை போன்ற மலைகளில் இருந்து  பெய்யும் மழைநீர்  ஏரிக்கண்மாய்க்கு வந்தடையும். 

கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழை காரணமாக கண்மாய்க்கு நாள்தோறும் தண்ணீர் அதிக அளவில் வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து கண்மாய் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் கழுங்கு வழியாக நீர் வழிந்தோடி அருவிபோல் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இத்தகவல் சுற்றுவட்டார பகுதியில் பரவியதை அடுத்து நாள்தோறும் சிவகங்கை, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இப்பகுதிக்கு குடும்பத்துடன் வந்து முகாமிட்டு ஆனந்த குளியல் இட்டுச் செல்கின்றனர். வறண்ட சிவகங்கை மாவட்டத்தில் உற்சாக குளியல் இட சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளது அப்பகுதி விவசாயிகள் மற்றும் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *