• Sat. Apr 20th, 2024

டாப் 10 செய்திகள்

Byமதி

Oct 2, 2021
  1. பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர். பாப்பாபட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, அங்கன்வாடி கட்டித் தரப்படும் என உறுதி
  2. காந்தியடிகளின் 153ஆவது பிறந்தநாளையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பல தலைவர்கள் மரியாதை. தமிழகத்திலும் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.

3.திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில தேர்தல் பணிக் குழு செயலாளருமான வீரபாண்டி ராஜா, மாரடைப்பால் திடீரென மரணம். முதல்வர் ஸ்டாலின் உட்பட தி.மு.க வினர் அஞ்சலி செலுத்தினர்.

  1. நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல் மூட்டைகள் கொண்டுசெல்ல ஆன்லைன் பதிவு தேவையில்லை என உணவுத்துறை அமைச்சர் அறிவிப்பு.
  2. தைவானில் அத்துமீறி பறந்த சீனாவின் 38 போர் விமானங்கள். தைவான் ராணுவப் படை வீரர்கள் விரட்டி அடித்ததுள்ளனர்.
  3. நியாய விலைக் கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவித்ததை தொடர்ந்து நியாய விலைக் கடைகள் மற்றும் அமுதம் அங்காடிகளில் பனை வெல்லம் விநியோகம்
  4. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, ஈரோடு மட்டும் பல்வேறு பகுதிகளில் கனமழை.
  5. பெப்சி சினிமா தொழிலார்களுக்கு வீடு கட்ட நடிகர் விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளார்.
  6. கொரோனா பரவல் முழுவதுமாக கட்டுக்குள் வந்ததை அடுத்து ஜப்பானில் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.
  7. சமந்தா, நாக சைதன்யா இருவருமே இன்ஸ்டாகிராமில் தனித்தனியாக தாங்கள் கணவன் – மனைவி என்கிற குடும்ப உறவில் இருந்து பிரிந்து செல்வதாக அறிவித்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *