• Mon. Mar 20th, 2023

மதுரையில் காந்தியடிகளின் பிறந்த நாளில் அனைத்து கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் மரியாதை!..

Byகுமார்

Oct 2, 2021

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள காந்தி சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மரியாதை செய்யப்பட்டது. அதேபோல் தேமுதிக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வக்குமார் தலைமையிலும், பாரதிய ஜனதா கட்சி மதுரை புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் தலைமையில் மரியாதை செய்யப்பட்டது.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *