பழமைவாய்ந்த தருமபுரம் ஆதின மடத்தில் நாளை பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுகிறது ஆதீனகர்த்தர்கள், பாஜக மாநில த்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்
தருமபுரம் ஆதீன திருமடத்தில் நாளை நடைபெறும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பல்வேறு ஆதீனகர்த்தர்கள், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தருமபுரம்ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்தார்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் உள்ள பழமைவாய்ந்த ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயிலில்ஆதீன குருமுதல்வர் ஸ்ரீ குருஞானசம்பந்தர் குருபூஜை பெருவிழாமே 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கியநிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
தேரோட்டத்துக்குப் பின்னர், தருமபுரம் ஆதீனகர்த்தர் கூறியதாவது: தருமபுரம் ஆதீன குருமுதல்வர் குருபூஜை விழாவை முன்னிட்டுஇன்று குருஞானசம்பந்தரின் குருவான கயிலை ஞானப்பிரகாசரின் குருபூஜை திருநாள் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 27 ஆயிரம்மரக்கன்றுகள் நடப்படும். இதைத் தொடர்ந்து, மே 22-ம் தேதி (நாளை) இரவு பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும்.
இதில், பல்வேறு ஆதீனகர்த்தர்கள், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சில அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்வதாக கூறியுள்ளனர் எனத் தெரிவித்தார்.