கோவில் விழாவில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தலை வழங்கி உள்ளது. கோவில் விழா நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகளோ, ஆபாச நடனங்களோ இடம் பெறக்கூடாது என்றும், நிபந்தனைகள் மீறப்பட்டால் காவல்துறையினர் நிகழ்ச்சிகளை நிறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.