கழுகுமலையில் முப்பம்தரத்து இசக்கியம்மன் கோயில் கொடை விழாகொடியேற்றத்துடன் துவங்கியது .அதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கழுகுமலை மேலக்கேட் பகுதியில் சங்கரன்கோவில் சாலையில் எழுந்தருளியிருக்கும் முப்பம்தரத்து ஸ்ரீ இசக்கியம்மன் கோயில் கொடை விழா இன்று தொடங்கியது. காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நாட்கால் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுடலைமாடன் சாமி, கருப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. பூஜைகளை பூசாரி சேகர் ஆச்சாரி நடத்தினார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. வரும் மே 26ம் தேதி காலை 4 மணிக்கு கணபதி ஹோமம்,27 ம் தேதி காலை 9.30 மணிக்கு தீர்த்தகுடம் மற்றும் பால்குடம் எடுத்து வந்த அம்மனுக்கு பாலாபிஷேகம் நடக்கிறது. இரவு அர்த்தசாம பூஜை நடக்கிறது. 28 ம் தேதி மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. திரளான பக்தர்கள் விரதமிருந்து அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பூசாரி சேகர் ஆச்சாரி செய்து வருகின்றார்.
முப்பம்தரத்து இசக்கியம்மன் கோயில் கொடை விழா
