• Fri. Sep 22nd, 2023

வெ.சாமிநாத சர்மா காலமான தினம் இன்று!

Byகாயத்ரி

Jan 7, 2022

தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என,பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் வெ.சாமிநாத சர்மா. இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள வெங்களத்துார் எனும் சிற்றுாரில், 1895 செப்., 17ம் தேதி பிறந்தார்.

சுருக்கெழுத்து ஆசிரியர், ஆயுள் காப்பீடு கழக அலுவலர், கூட்டுறவுத்துறை அலுவலர் என பல்வேறு பணியில் இருந்தார்.’தேசபக்தன், நவசக்தி’ உள்ளிட்ட இதழ்களில் பணிபுரிந்தார். மியான்மர் சென்று ரங்கூன் நகரத்தில், ‘ஜோதி’ என்ற இதழைத் துவக்கி நடத்தி வந்தார்.

இரண்டாம் உலகப்போர் காரணமாக, நடைபயணமாக கோல்கட்டா வந்து, பின்
சென்னையில் குடியேறினார்.’பிளாட்டோவின் அரசியல், சமுதாய ஒப்பந்தம், கார்ல் மார்க்ஸ், பிரபஞ்ச தத்துவம்’ உட்பட, 80க்கும் மேற்பட்ட நுால்கள் எழுதியுள்ளார்.

சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க தலைவராக செயல்பட்டார். 1978 ஜன., 7ம் தேதி, தன் 83வது வயதில் இயற்கை எய்தினார். வெ.சாமிநாத சர்மா காலமான தினம் இன்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *