• Mon. Mar 20th, 2023

தமிழகத்தின் இன்று சமூகநீதி நாள் கொண்டாட்டம் ரூ.2 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கிய எம்.பி.!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மகிழ்ச்சியின் வெளிப்படாக இன்று தந்தை பெரியாரின் பிறந்தநாளில் நாட்டுப்புற கலைஞர்கள் அனைவரும் இசை இசைத்து மாண்புமிகு.தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
சமூக நீதி நாளில், சேலம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், ரூ.2 லட்சம் மதிப்பில் பொதுமக்களுக்கு தையல் இயந்திரம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *