• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

புதிய செயலி சுவிதா 2.0 செயலி உருவாக்கம்..,

ByKalamegam Viswanathan

Mar 18, 2026

சட்டமன்ற பொதுத்தேர்தல் பிரச்சாரம், திருமண மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெற புதிய செயலி சுவிதா 2.0 செயலி உருவாக்கப்பட்டது.

தேர்தல் களம் கடந்த காலங்களில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் பிரச்சார வாகனங்கள் பயன்படுத்துதல், மேடைகளில் பிரச்சாரம் செய்தல் மற்றும் தேர்தல் அலுவலகம் அமைத்தல் உள்ளிட்ட தேர்தல் பணிகள் தொடர்பாக தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும். என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தது

புதிய செயலி இந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் மாதம் 23-ந் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடக்கிறது. இதனையொட்டி வருகின்ற 30-ந்தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் பிரச்சாரம் மற்றும் பிரச்சார வாகனங்கள் பயன்படுத்துதல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அனுமதி பெறுவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் “சுவிதா (SUVIDHA 2.0)” https://suvidha.eci.gov.in/ac/public/login என்ற புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்த உள்ளது.இந்த புதிய செயலி மூலம் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் நடத்துதல், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான நிகழ்வுகளுக்கு அனுமதிக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பத்தின் நிலைமையை நேரடியாக கண்காணிக்கவும், அனுமதி ஆவணங்களை பதிவிறக்கம் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் SUVIDHA 2.0 செயலி மூலம் மொபைல் போனிலேயே விண்ணப்பிக்கவும், விண்ணப்பத்தின் நிலைமையை அறியவும், அனுமதி ஆவணங்களை பெரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.