பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. பெரியார்
பிறந்த நாள் விழா, இனி சமூகநீதி விழாவாகக் கொண்டாப்படும் என தமிழ்நாடு முதல மைச்சர் ஸ்டாலின், சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட் டார். அதன்படி, பெரியாரின் 143-வது பிறந்த நாளான நேற்று, சமூகநீதி நாளாகக் கொண்டாடப் பட்டது.
அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பலரும் தனது முழுமனதோடு மரியாதையை பெரியாருக்கு செலுத்தினர். அந்த வகையில் கேரளா மாநிலம் வைக்கம் பகுதியில் அமைந்துள்ள பெரியாரின் நினைவிடத்தில் கோட்டயம் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர். பி.கே.ஜெயஶ்ரீ இ.ஆ.ப., அவர்கள் தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு அருகில் அமைந்துள்ள திருவுருவ படத்திற்க்கு மாலை ஆணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் ஜி. இஸ். சமீரன் “தந்தை பெரியரின் வாழ்கை வரலாறு, முன்னால் முதல்வர் கருணாநிதி அவர்களின் வாழ்கை வரலாறு புத்தகங்களை ஜெயஶ்ரீ அவர்களுக்கு வழங்கினார்.