• Tue. Jun 17th, 2025
[smartslider3 slider="7"]

ராஜாஜி பிறந்த தினம் இன்று!

Byகாயத்ரி

Dec 10, 2021

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில், 1878 டிசம்பர் 10ல் பிறந்தவர், ராஜாஜி.இவரின் இயற்பெயர், சி.ராஜகோபாலாச்சாரி.பிரபல வழக்கறிஞராக திகழ்ந்த இவர் காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார்.கடந்த, 1937 முதல் 1940 வரை, மதராஸ் மாகாண முதல்வராக பதவி வகித்தார்.

1948 முதல் 1950 வரை, சுதந்திர இந்தியாவின், முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தார். மேற்கு வங்க கவர்னராகவும், மத்திய உள்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். 1952ல், சென்னை மாகாண முதல்வராக பதவி வகித்தார். முன்னாள் பிரதமர் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சுதந்திரா கட்சியை நிறுவினார்.

கடந்த, 1967ல், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, வெற்றி கண்டார். தமிழிலும் ஆங்கிலத்திலும் நுால்கள் எழுதியுள்ளார். ராமாயணம், மகாபாரதத்தை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். ‘பாரத ரத்னா’ உட்பட ஏராளமான விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. 1972 டிசம்பர் 25ல் தன், 94வது வயதில் காலமானார்.இத்தகைய பெருமைக்குரிய ராஜாஜி பிறந்த தினம் இன்று!