• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Byமதி

Nov 15, 2021

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்கு வெள்ளக் காடானது. இதனையடுத்து இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அம்மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்தும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு ஒரு சில இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.