• Tue. Nov 3rd, 2026

மாணவர்கள் மீது அக்கறை கொண்டு தமிழக முதல்வர் திட்டங்களை செயல் படுத்தி வருகிறார்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் நபார்டு திட்டத்தில் பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை அரசு மேல் நிலைப்பள்ளியில் ரூ.197.92 லட்சம் மதிப்பீட்டில் 8 வகுப்பறை கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடம்,மேட்டுப் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்ரூ.141.36 லட்சம் மதிப்பீட்டில் 6 வகுப்பறை கொ ண்ட கூடுதல் பள்ளி கட்டிடம், பால மேடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி யில் ரூ.148.44 மதிப்பீட்டில் 6 வகுப்ப றை கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடம், முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 98.96 லட்சம்மதிப்பீட்டில் 4வகுப்பறை கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடங்க ளில் திறப்பு விழா நடந்தது. இந்த விழாவிற்கு கட்டிடங்களை கருப்பையா எம்.எல்.ஏ., தலைமை தாங்கி திறந்து வைத்து பேசினார்.

மாவட்ட கல்வி அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர்கள் விஜயகுமார், குரும்பன், திருநாவுகரசு, சாந்தி ஆகியோர் வரவேற்றனர். இதில் கருப்பையா எம்.எல்.ஏ., பேசியதாவது:-மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் மாதா, பிதா, குரு,தெய்வம் இந்த நான்கு பேரும் பிறப்பு, வளர்ச்சி, அறிவு, ஒழுக்கத்தின் காரணகர்த்தாக்கள் ஆவார்கள். அதனால் மாணவச் செல்வங்களாகிய நீங்கள் பெற்றோர்களின் சொற்படி நடந்து ஆசிரியர் களின் அறிவுரைப்படி ஒழுக்க பண்புடன் செயல்பட வேண்டும். அதனால் வீட்டிற்கும் நாட்டிற்கும் உயர்வு ஏற்படும். ஒழுக்கம் ஒன்றுதான் உயர் வைத் தரும், கல்வி எல்லோருக்கும் அறிவைத்தரும்.

அதனால் மாணவப் பருவத்தில் கல்வி அறிவு பெற்று வாழ்வில் எல்லோரும் உயர வேண்டும். உங்கள் பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உறுதியாக செய்து கொடுப்பேன்.தமிழக முதல்வர் ஜோசப்விஜய் மாணவர்கள் மீது அக்கறை கொண்டுஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாணவ,மாணவிகள், ஆசிரியர்கள்,பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பழைய மாணவர் சங்க நிர்வாகிகள்,தமிழக வெற்றிக் ககழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் பி .ஜி. ராஜா நன்றி கூறினார்.