விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே ஐ என் டி யு சி நகர் பகுதியில் தூத்துக்குடியில் இருந்து ராஜபாளையம் தனியார் நூர்பாலைக்கு சரக்கு கொண்டு வந்த கண்டைனர் லாரி , ராஜபாளையம் அரசு மருத்துவமனை அருகே கார்மெண்ட் நடத்தி வரும் தவமணி,

என்பவர் தனது காரை சர்வீஸ் செய்வதற்காக கொண்டு சென்ற பொழுது இண்டிகேட்டர் போடாமல் வலது புறம் திரும்பிய பொழுது அவர் மீது மோதாமல் இருப்பதற்காக கண்டைனரை ஓட்டி வந்த தூத்துக்குடியை சேர்ந்த டிரைவர் ஆபிரகாம் கார் மீது மோதாமல் இருப்பதற்காக இடது புறமாக திருப்பிய போது புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தெற்கு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் முத்துமாரியப்பன் (வயது 49)

இருசக்கர வாகனத்தின் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார், இந்த விபத்தில் உயிரிழந்த முத்துமாரியப்பன் உடலை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து கண்டய்னர் ஒட்டி வந்த ஓட்டுநர் ஆபிரகாம் மற்றும் காரை ஒட்டி வந்த தவமணியை ராஜபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
