மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியான சதுரகிரி மலை அடிவார பகுதியான சாப்டூர், வண்டாரி, அத்திபட்டி, வண்டப்புலி, கிருஷ்ணாபுரம் பகுதிகளில் பருவமழை காரணமாக நீர் நிலைகள் போதுமான அளவு நிரைந்து காணப்படுகின்றன.,

நீர் நிலைகள் நிரம்பியுள்ளதால் விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்., குறிப்பாக நெல் நடவு செய்யும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.,
நிலத்தை உழுது சமப்படுத்தி, நெல் நடவு பணிகளின் போது பெண்களும் இயற்கையோடு இணைந்து நாட்டுப்புற பாடல்களை பாடியவாறு நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.,
