ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 3-4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்யுங்கள். பின்பு ஷவர் கேப் கொண்டு தலையை சுற்றி, 40-45 நிமிடம் நன்கு ஊற வையுங்கள். இறுதியில் ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் தலையை அலசுங்கள். இந்த மாஸ்க்கினால் தலைமுடியின் மயிர்கால்கள் வலிமையடைந்து, தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, தலைமுடியில் சிக்கு ஏற்படாமல் இருக்கும்.