• Wed. Dec 11th, 2024

டாஸ்மாக் ஊழியர்களை தாக்கியவர்கள் மீது குண்டர் சட்டம் பாயவேண்டும் – சேலத்தில் ஆர்ப்பாட்டம்!..

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் டாஸ்மாக் கடையில் பணியாற்றிய துளசிதாஸ் மற்றும் சக பணியாளர்கள் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் துளசிதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் மாநில துணை பொது செயலாளர் முத்துகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து டாஸ்மாக் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய குண்டர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி கோசங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மாநில துணை பொது செயலாளர் முத்துக்குமரன் கூறும்போது கடந்த சில வருடங்களாகவே டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம் டாஸ்மாக் கடையில் நடந்த தாக்குதலில் ஊழியர் துளசிதாஸ் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குண்டர்கள் மீது தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் டாஸ்மாக் கடை ஊழியர் மீது தாக்குதல் நடத்துபவர்களை ஒடுக்கும் விதமாக அரசு கடுமையான சட்டத்தை கொண்டு தடுக்க வேண்டுமென கோரிக்கையை முன்வைத்தனர். மேலும் உயிரிழந்த குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தனர் பேட்டி மாநில துணை பொது செயலாளர் முத்துக்குமரன்