• Sun. May 10th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

உழவர் சந்தையில் வைக்கப்பட்டுள்ள இந்த பழங்கள் சிற்பக் கண்காட்சி..,

BySubeshchandrabose

Mar 24, 2026

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் வருகிற 23ஆம் தேதி தொடங்குகிறது.

இதில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள் தேனி மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று தேனி உழவர் சந்தையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி காய்கறி தர்பூசணி பழங்களை செதுக்கி பழ சிற்ப கண்காட்சி காட்சிப்படுத்தப்பட்டது

வாக்குப்பதிவு நாள், “உங்களது வாக்கு உங்களது உரிமை”, “100% வாக்குப்பதிவு” ஆகிய வாசகங்கள் தர்பூசணி பழங்களில் பொறிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

தொடர்ந்து பொதுமக்கள், காய்கறி வியாபாரிகள், தொழிலாளர்கள் ஆகியோர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கூறி உழவர் சந்தையில் பிரசுரங்களை தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் வழங்கினார்

தேனி உழவர் சந்தையில் வைக்கப்பட்டுள்ள இந்த பழங்கள் சிற்பக் கண்காட்சி முன்பு பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.