• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

தங்கள் வழிபட்டு வந்த சாமி சிலையை மீட்டு தர கோரி பொதுமக்கள் போராட்டம்..,

BySubeshchandrabose

Mar 24, 2026

தேனி அருகே கொடுவிலார்பட்டியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கருப்பசாமி திருக்கோயில் உள்ளது

இந்தக் கோயிலில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆண்டுதோறும் வழிபட்டு திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்

இதில் சுமார் 4 குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் மட்டும் தன்னிச்சையாக செயல்பட்டு கோயிலில் வழிபட்டு வந்தனர்

இந்த நிலையில் இருதரப்புக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு தரப்பு தனியாக வழிபட போவதாக கூறி மூலவர் அம்மன் சிலையை வேறு பகுதிக்கு எடுத்து சென்று கோயில் சுற்றுச்சுவரை இடித்து வைத்துள்ளதாக கோயிலில் வழிபடும் பொதுமக்கள் புகார் தெரிவித்து

கோயிலின் முன்பு அமர்ந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் நாங்கள் பாரம்பரியமாக வழிபட்டு வந்த அம்மனின் சிலையை எங்களின் அனுமதி இல்லாமல் வேறு பகுதிக்கு எடுத்துச் சென்று வைத்துள்ளார்கள்

எனவே எங்களது சாமி சிலை மற்றும் கோயிலை எங்களுக்கே மீட்டுத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.