• Mon. Mar 17th, 2025

திருப்பரங்குன்றம் முருகனும், தெய்வானையும் வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா …

ByKalamegam Viswanathan

Mar 11, 2025

திருப்பரங்குன்றம் பங்குனிப் பெருவிழா 5ஆம் நாளான இன்று பக்தர்கள் வெள்ளத்தில் கைப்பாரத் திருவிழா -வெள்ளி யானை வாகனத்தில் சுப்ரமணியசாமி தெய்வானை வீதி உலா வந்தனர் .

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப்பெருவிழா 15 நாட்கள் கொண்டாடப்படும் திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவின் 5 ஆம் நாளான இன்று கைப்பார உற்சவ திருவிழா நடைபெற்றது. இது திருப்பரங்குன்றம் கிராமத்தார் சார்பில் கொண்டாடப்படும் திருவிழா.

இதில் கோயிலில் மிக அதிக எடை கொண்ட வெள்ளி யானை வாகனத்தை பக்தர்கள் தங்கள் உள்ளங்கைகளில் வைத்து தூக்கி வருவர். இத்திருவிழாவானது இந்திரனின் வெள்ளை யானையில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையோடு பறந்து வருவதை குறிக்கும் வகையில் இத்திருவிழா கொண்டாடப்படுவதாக கிராமத்தார் தெரிவிக்கின்றனர். இதனையொட்டி சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார்.

தொடர்ந்து கொத்தாளத்து முக்கு பகுதியில் இருந்து கிராமத்தார் தங்களது உள்ளங்கைகளில் வாகனத்துடன் சுவாமியை பெரியரத வீதியிலிருந்து கோயில் வாசல் வரையும், பின்பு கோயில் வாசலிலிருந்து மீண்டும் பெரியரத வீதியில் தூக்கி சுவாமியை வீதி உலா வலது புறமும், இடது புறமுமாக சாய்த்து பக்தர்கள் எடுத்து வந்தனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.