

மதுரை மாவட்டம் சிக்கந்தர் சாவடியை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் கமலேஷ் என்ற எம்பிஏ பட்டதாரி இளைஞர் கோவையில் டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில் வேலை பார்த்து வருகிறார்*
இந்த நிலையில் நேற்று மதுரை வந்த இளைஞர் இன்று மாலை சிக்கந்தர் சாவடி அலங்காநல்லூர் மெயின்ரோட்டில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டதில் சாலையின் நடுவே கமலேஷை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரை ஆம்புலன்சு மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வரும் வழியிலே இளைஞர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

