• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் சொத்து மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது…,

ByN.RajaMurugan

Aug 8, 2026

மதுரை மாநகர் கோரிப்பாளையம் ஹக்கிம் அஜ்மல்கான் சாலையில் அசோதா விலாஸ் பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம், மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மற்றும் அழகர்கோவிலுக்கு சேவை செய்வதற்காக கடந்த 1930 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு

சொந்தமான சொத்துகள் கடந்த 2021 ஆம் தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ய்யப்பட்ட வழக்கில் கறம்பக்குடியை சேர்ந்த ராஜ்குமார், உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜா, துணை ஆட்சியர் அன்பழகன் ஆகிய 3 பேரை மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் கைது செய்த நிலையில் 4 ஆவது நபராக பத்திரப்பதிவுக்கு உதவியதாக

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை தென்மலை கிராமத்தை சேர்ந்த கலிகுமார் என்பவரை கைது செய்த காவல்துறை பலத்த விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர்.