• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சிறப்பு மருத்துவ முகாம் – எம்எல்ஏ துவக்கி வைப்பு..,

ByP.Thangapandi

Aug 8, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பண்ணப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மக்கள் நலன் சார்ந்த மனநல திட்டம், கண் சிகிச்சை முகாம் மற்றும் ஆதார் கார்டு புதுப்பித்தல், திருத்துதல் முகாம்களை உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் துவக்கி வைத்தார்.,

இதனைத் தொடர்ந்து, அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி உபகரணங்களை வழங்கி, பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்நிகழ்வு பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது.,