• Sun. Mar 16th, 2025

கடந்த கால வாழ்க்கையை கேவலமா பேசி மன உளைச்சல் பண்றாங்க யூடியுபர் சத்யா மீது வழக்குப்பதிவு

ByKalamegam Viswanathan

Mar 11, 2025

சிறைக்கு சென்றுவந்த பின் என் வேலை உண்டுனு இருக்கேன், சிக்கந்தர் மனைவியின் சம்மதத்துடன் நாங்க லிவிங் டூ கெதர்ல இருக்கோம், யூ டியுப் பேமஸ் ஆவதற்காக என கடந்த கால வாழ்க்கையையும், கட்டைப்பை கருப்பி, வேசி என கேவலமா பேசி மன உளைச்சல் பண்றாங்க, எனது புகாரின் யூடியுபர் சத்யா மீது வழக்குப்பதிவு – ரௌடி பேபி சூர்யா பேட்டி அளித்துள்ளார்.

மதுரை திருநகரை சேர்ந்த யூடியூப்பரான சுப்புலெட்சுமி என்ற சூர்யா மற்றும் ரௌடி பேபி சூர்யா என்ற பெயரில் யூடியுப் சேனலை நடத்திவருகிறார். இவர் தற்போது. யூடியுபரான மதுரையை சேர்ந்த சிக்கந்தருடன் லிவிங் டூ கெதராக வாழ்ந்துவருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசியது தொடர்பான வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளனர்.

மதுரை திருநகரில் வசித்து வரும் சுப்புலெட்சுமி என்ற சூர்யா வின் வீட்டீன் முன்பாக தல்லாகுளம் பாரதியார் நகரை சேர்ந்த யூடியபரான சத்யா என்ற பெண் சிக்கந்தரின் மனைவி சுமியை அழைத்துவந்து சில தினங்களுக்கு முன்பு மிரட்டல் விடுத்ததாகவும், தனது மகனுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கூறி திருநகர் காவல்நிலையத்தில் சூர்யா புகார் அளித்த நிலையில் சத்யா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சூர்யா : சிறை என்பது தண்டனை அல்ல, திருந்திவாழ்வதற்கு தான் என்பதை உணர்ந்து, நான் சிறைக்கு சென்றுவந்த பின் நான் உண்டு என் வேலை உண்டுனு இருக்கேன்,எனக்கு 6 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்காங்க, இப்போதெல்லாம் ஆபாசமாக பேசுவதில்லை ஆபாச உடை அணிவதில்லை தற்போது சமையல் வீடியோ எங்கள் வீட்டில் நடக்கும் சண்டையை காமெடியாக வீடியோ போடுறேன், ஆனால் சிலர் யூடியுப் பேமஸ்க்காக என்னுடைய கடந்தகால வாழ்க்கை குறித்தும் கட்டைப்பை கருப்பி, வேசி என பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.

சிக்கந்தரின் மனைவிக்கு தெரிந்து தான் நாங்க லிவிங் டூ கெதர்ல இருக்கோம், இந்நிலையில் எனக்கு யூடியுபர்லசித்ரா மூலமாக நட்பான சத்யா என்பவர் என்னிடம் பணம் பெற்றுக்கொண்டு அதனை திரும்ப கேட்டால் மிரட்டல் விடுத்தார், மேலும் எதுவும் தெரியாத சிக்கந்தரின் மனைவியை அழைத்துவந்த யூடியுபர் சத்யா தனது வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் எனது மகன் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கான் என்றார்.

நான் வெளியூரில் இருந்தபோது எனது வீட்டில் வந்து மிரட்டியுள்ளனர். தற்போது FIR போட்டும் மிரட்டல் விடுக்கின்றார். நான் அழைத்தவுடன் 5 நிமிடத்தில் வந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர், இதேபோன்று பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான புகார்கள் மீதும்,திருந்தி வாழ்பவர்கள் மீதும் அவதூறாக பேசுபவர்கள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என க்கூறி காவல்துறையினருக்கு நன்றி என தெரிவித்தார்.