திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோட்டில் இருந்து சோழவந்தான் செல்லும் சாலையில் பள்ளபட்டி பிரிவு அடுத்த மாவுத்தாறு ஓடை ஒரு மலைப்பாம்பு சாலையை கடந்து சென்று தோட்டத்திற்குள் சென்று பதுங்கியது. அதை பார்த்த அந்த வழியாக சென்ற பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் நிலக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையில் படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்,

அங்குஒரு தனியார் தென்னை தோப்பு தோட்டத்தில் மறைந்திருந்த 12 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பை தீயணைப்பு படை வீரர்கள் உயிரோடு உயிருடன் பிடித்தனர். அதன் பிறகு அந்த மலைப் பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்
இந்த சம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


