கோவை சுக்ரவார்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞர், முதியவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதுவதுபோல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனை தட்டிக் கேட்ட 72 வயதான செல்வராஜ் என்ற முதியவரை, ஆத்திரமடைந்த இளைஞர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த முதியவர் செல்வராஜ், இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், புகார் அளித்தும் இதுவரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கிடையே, தாக்குதலில் காயமடைந்த முதியவர் தொடர்ந்து உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
72 வயது முதியவரை தாக்கிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புகார் அளித்தும் வழக்குப்பதிவு செய்யாதது குறித்து காவல்துறை உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கிடையே முதியவரை கண்மூடித்தனமாக இளைஞர் தாக்கும் சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.


