• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

ஜி.டி.என் கல்லூரியில் 9-வது தேசிய இயற்கை மருத்துவ தின விழா..,

Byp Kumar

Nov 28, 2026

திண்டுக்கல் ஜி.டி.என் மருத்துவக் கல்லூரி இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் 9-வது தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில அளவிலான மாபெரும் தேசிய இயற்கை மருத்துவ தின விழா நடைபெற்றது.

இந்த விழாவானது கல்லூரி சேர்மன் ரெத்தினம், கல்லூரி இயக்குனர்கள் துரை, மற்றும் LLa கல்லூரி செயலாளர் KKR வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் மற்றும் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

தமிழகம் முழுவதிலுமிருந்து 22 தனியார் கல்லூரிகள், 2 அரசு கல்லூரிகள் என மொத்தம் 24 கல்லூரிகளைச் சேர்ந்த 3,500-க்கும் மேற்பட்ட BNYS மாணவர்கள்,
MD ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் அரசு, தனியார் துறை இயற்கை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

கல்லூரி இயற்கை மருத்துவம் மற்றும் யோகா முதல்வர் தீபா,
இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பட்டதாரிகள் சங்க தலைவர் சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.