• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி கிளை நூலகத்தில் சார் ஆட்சியர் உட்கர்ஷ்குமார் திடீர் ஆய்வு..,

ByP.Thangapandi

Nov 28, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிளை நூலகத்தில் உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ்குமார் திடீர் ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வில் நூலகத்தில் வருகை பதிவேடு மற்றும் நூலகத்தில் படிக்கும் நபர்களிடம் குறை நிறைகளை கேட்டறிந்தார்.

மேலும் அங்குள்ள கணினிகளை சரிபார்த்தார். குடிநீர் வசதிகளையும் சரிபார்த்தார். மேலும் அங்கு படிக்கும் நபர்களிடம் ஏதாவது குறைகள் உள்ளதா படிப்பதற்கு புத்தகங்கள் தேவைப்படுகிறதா என்று கேட்டறிந்தார். மேலும் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த நபர்கள் சார் ஆட்சியரிடம் நூலகத்தின் முன்பாக தண்ணீர் பெருகி இருப்பதால் படிக்க வரும் நபர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம் என்றனர்.

உடனடியாக சார் ஆட்சியர் நகராட்சி ஆணையாளர் சங்கர் கணேஷ் அவர்களிடம் தொடர்பு கொண்டு உடனடியாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் நூலகத்திற்கு வரும் நபர்கள் சாப்பிடுவதற்கு டேபிள் ஷேர் மற்றும் தகர ஷாப் வேண்டுமென்று சார் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று சரி செய்து தருகிறோம் என்று கூறினார்.