• Sat. Feb 15th, 2025

தேனி தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பேட்டி…

ByKalamegam Viswanathan

Jan 21, 2025

நிதி நெருக்கடிக்கு மத்தியில் 4 ஆண்டு நல்லாட்சி நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் என தேனி தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பேட்டி அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அங்காள ஈஸ்வரி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்த போது..,

40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் தேனி தொகுதிக்கு திமுகவைச் சேர்ந்தவர் எம் பி ஆக வந்துள்ளார் நான் என்பியாக வந்து ஆறு மாதம் தான் ஆகிறது ஆனாலும் ஒவ்வொரு கிராமத்திலும் பொதுமக்கள் கூறும் புகார்களை உடனடியாக நிறைவேற்றி வருகிறேன் இந்தப் பகுதியில் கூட முதலைக்குளம் கண்மாய் தூர்வராமல் இருப்பதாக தகவல் வந்தது உடனடியாக அமைச்சரிடம் சொல்லி அதற்கான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து இருக்கிறேன்

விஜய் மக்களை சந்திப்பதில் திமுக முட்டுக்கட்டை போடுகிறதா என்ற கேள்விக்கு..,

யாரும் மக்களை சந்திக்க திமுக முட்டுக்கடை போட வேண்டிய அவசியம் இல்லை கடந்த 4 ஆண்டு ஆட்சியில் பல்வேறு நிதிச் சுமைகள் இருந்தாலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வருகிறார் ஆகையால் யாருக்கும் அச்சப்படத் தேவையில்லை.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் குவாரி பிரச்சனையில் சமூக ஆர்வலர் இறந்த விவகாரம் குறித்த கேள்விக்கு..,

தமிழக காவல்துறை செய்ய வேண்டிய வேலையை பி.ஜே.பி தலைவர் அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார். அவர் பிஜேபிக்கு தான் தலைவர் தமிழக காவல்துறைக்கு அல்ல அவர் இறந்தது குறித்து காவல்துறை நேர்மையான விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்.

13 அமாவாசைக்கு பிறகு தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார் என்ற கேள்விக்கு..,

இதுவரை வந்த அம்மாவாசையால் எந்த பலனும் ஏற்படவில்லை இனிவரும் அமாவாசையால் தான் ஏற்பட போகிறதா இவ்வாறு கூறினார்.

இதில் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகரன் உசிலம்பட்டி அஜித் பாண்டி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.